வடமேல் மாகாண மலர் – எட்டேரியா பூ

வடமேல் மாகாண மலர் – எட்டேரியா பூ

வடமேல் மாகாணத்தின் மலராக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் எட்டேரியா மலரின் தாவரவியல் பெயரானது Murraya Paniculta(L) Jack என்று குறிப்பிடப்படுவதுடன் Rutacea வர்க்கத்திற்கு உரியதாகும். ஆங்கிலத்தில் இதனை “ Dharsuubatae Neepasae” என்று குறிப்பிடப்படுகிறது.

இது மூலிகையாக மிகவும் முக்கியத்துவம் அடைகின்றது. தாவரத்தின் தன்மையை எடுத்துக் கொண்டால் மரம் ஐந்து மீட்டர் உயரத்திற்கு வளருவதுடன், பற்றை வடிவ தாவர அமைப்பை உடையது. இலையானது எழுமிச்சை இலையின் வடிவத்திற்கு ஒத்ததாகவும் பளபளக்கும் தன்மையுடைய இலையாகும். இரவு சந்திர ஒளியுடன் மலரும் இப்பூவானது வெள்ளை நிறத்தினை உடையது. இந்த தாவரம் இலங்கையில் கீழ் நாட்டு உலர் வலையங்கள் மற்றும் இடைநிலை வலையங்களிலும் பரவலாக காணப்படுகின்றது.